10/10/2026
நாம் வாழ்வது வாழ்க்கையா⁉️
ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் சுடுதண்ணீர் இருக்கும்போது, அதில் ஒரு தவளையைத் தூக்கிப் போட்டால், அது சுட்ட உடனே ஒரே தாவலில் வெளியே குதித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்.
ஆனால்... அதே தவளையைச் சாதாரணக் குளிர்ந்த தண்ணீரில் போட்டு, அடியில் மிகக் குறைந்த தணலில் (Slow heat) மெதுவாகச் சூடேற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?
தண்ணீர் மெல்ல வெதுவெதுப்பாக மாறும் போது, தவளை அதை மிகவும் சுகமாக, Comfortable ஆக உணரும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் போதெல்லாம், தன் உடல் வெப்பநிலையையும் அதற்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொண்டே போகும் (Adaptation).
வெப்பம் உச்சக்கட்டத்தை எட்டி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போதுதான் தவளைக்குத் தான் ஆபத்தில் இருப்பது புரியும். ஆனால், அத்தனை நேரமும் வெப்பத்தைத் தாங்குவதிலேயே தன் முழு சக்தியையும் இழந்துவிட்டதால்... அதனால் குதிக்க முடியாது. தான் இருந்த இடத்திலேயே வெந்து சாகும்.
இது தவளைக்கான கதை மட்டுமல்ல; நம் சமூகத்தின் கதை!
இன்று நமது அரசியல், வணிக நிறுவனங்கள் , ஊடகங்கள் நம் மீது கையாளும் அதே உளவியல் தந்திரம்தான் இந்த "Boiling Frog Trap".
எந்த ஒரு பெரிய சுமையையும், சுரண்டலையும் நம் மீது திடீரெனத் திணித்தால் சமூகம் உடனடியாகப் பொங்கி எழும்; போராடும்; வெளியே குதிக்கும்.
அதனால் அவர்கள் மிகக் கவனமாக நீரின் வெப்பத்தை மெதுவாக ஏற்றுகிறார்கள்:
1. சின்னச் சின்னப் பொய்களை சாதாரணமாக்குவது :
ஆரம்பத்தில் அருவருப்பாகவோ அநீதியாகவோ தெரிந்த ஒரு விஷயம், ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டு, "இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜம்பா..." என்று நம்மையே பேச வைப்பது.
2. அடிப்படை உரிமைகளைச் சலுகைகளாக மாற்றுவது:
சுத்தமான காற்று, நஞ்சில்லாத உணவு, ஆரோக்கியமான தூக்கம், சுய சிந்தனை போன்ற இயற்கையான விஷயங்களைக் கூட மார்க்கெட் பொருளாக்கி விற்றுவிட்டு, கையில் ஒரு ஸ்மார்ட்போனையும் முடிவில்லா பொழுதுபோக்குகளையும் கொடுத்து நம்மை "Comfort Zone"-ல் கட்டிப்போடுவது.
3. அடிமைத்தனத்தைப் பழக்கப்படுத்துவது (Conditioning):
விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் மருத்துவச் சுரண்டல், உணவில் கலப்படம், ரசாயன நச்சு சூழல் என எல்லாவற்றையும் மெல்ல மெல்ல ஏற்றிவிட்டு... "இதுதான் யதார்த்தம், இதோட அட்ஜஸ்ட் பண்ணி வாழப் பழகிக்கோங்க" என்று நம்மைத் தகவமைத்துக் கொள்ளச் செய்வது.
நாம் எதை இழக்கிறோம் என்றே நமக்குத் தெரியாத அளவுக்கு ஒரு "வசதியான வலையில்" (Comfortable Trap) சிக்க வைக்கப்பட்டு இருக்கிறோம். வெப்பம் ஏறிக்கொண்டே இருக்கிறது... ஆனால் நாம் இன்னும் குதிக்காமல், தண்ணீரின் வெதுவெதுப்பை ரசித்துக் கொண்டிருக்கிறோம்!
எப்போது நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளையும் சீரழிவுகளையும் 'இயல்பு' என்று கடந்து போகத் தொடங்குகிறோமோ... அன்றே நாம் அந்தப் பாத்திரத்திற்குள் வேகத் தொடங்கிவிட்டோம் என்று அர்த்தம்.
✅சுயசிந்தனை மட்டுமே இந்தத் தணலில் இருந்து நம்மை வெளியே குதிக்க வைக்கும் ஒரே உந்துசக்தி.
விழித்துக் கொள்வோமா? அல்லது வேகப் போகிறோமா?
💬உங்கள் பார்வையில், இன்று நம் சமூகம் "சகஜம் தான்" என்று பழகிக்கொண்ட மிகப்பெரிய தவறு அல்லது ஆபத்து எது? கமெண்ட்டில் யோசித்து எழுதுங்கள்.
Dr. Faleela , BNYS