31/08/2026
🇱🇰 Sri Lankan Style கடை பப்படம் 🫓❤️
கடையில் வாங்குற மாதிரி மொறுமொறுப்பான பப்படம் வீட்டிலேயே செய்யலாம் 😋
தேவையான பொருட்கள்
• உளுந்து மாவு – 500g
• உப்பு – 10–12g
• கருமிளகு – 1 tsp
• பெருங்காயம் – ½ tsp
• சீரகம் – 1 tsp
• எண்ணெய் – 1 tbsp
• தண்ணீர் – தேவையான அளவு
செய்வது எப்படி?
முதலில் உளுந்து மாவுடன் உப்பு, கருமிளகு, பெருங்காயம், சீரகம் எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதுக்குப் பிறகு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாவு பிசையணும்.
மாவை 10–15 நிமிஷம் நல்லா பிசைந்து எடுத்துக்கோங்க. மாவு நல்லா smooth-ஆ வரணும்.
சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி, ஒவ்வொன்றையும் ரொம்ப மெல்லிசா தேய்த்து எடுக்கணும்.
பிறகு சின்ன வட்ட அச்சு வைத்து ஒரே அளவுல வெட்டி எடுத்துக்கோங்க.
இதை நல்லா வெயில்ல காய வைக்கணும்.
நான் 2 நாள் கடும் வெயில்ல காய வைப்பேன். நல்லா காய்ந்து ஈரம் இல்லாம இருந்தாதான் நீண்ட நாள் நல்லா இருக்கும்.
நல்லா காய்ந்ததும் டப்பாவுல போட்டு வச்சுக்கலாம்.
பொரிக்கும்போது எண்ணெய் நல்லா சூடா இருக்கணும். பப்படத்தைப் போட்டதும் சில செகண்ட் இல் எடுத்து விடலாம். 😍
கடை பப்படம் மாதிரி மொறுமொறுப்பா வரணும்னா
மாவை நல்லா பிசைக்கணும், ரொம்ப மெல்லிசா தேய்க்கணும், முக்கியமா நல்லா காய வைக்கணும்.
❤️ ஒரு நாள் செய்து வச்சா ஒரு வாரம் சாப்பிடலாம்! ❤️❤️