Diet for Life

Call Directions Website Contact the business

Diet for Life உடல் நிறைக் குறைப்பு, உடல் நிறை அதிகரிப்பு உணவுச் சிகிச்சை கிளினிக்

Diet for Life is your trusted partner in healthy weight management and personalised nutrition. Based in Sri Lanka, we proudly support clients worldwide through consultations in English and Tamil. We design individual diet plans for weight loss, fitness goals, and health conditions such as diabetes, high blood pressure, heart disease, kidney disorders, and digestive issues (IBS, gastritis, GERD, ulcers, etc.). We also provide tailored nutrition guidance for bodybuilders, fitness enthusiasts, and for different life stages including pregnancy, lactation, infancy, and elderly care.

🌍 Wherever you are, our mission is to help you achieve a healthier, sustainable lifestyle through science-based diet and nutrition.

பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பார்கள். ஆனால் உடம்பு கூடிய பெண்ணுக்கு சிறிசிலிருந்து பல்லுப்போன பாட்டன், பாட்டி கூட வில்ல...
15/10/2026

பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பார்கள். ஆனால் உடம்பு கூடிய பெண்ணுக்கு சிறிசிலிருந்து பல்லுப்போன பாட்டன், பாட்டி கூட வில்லர்கள் தான். ஏதோ அக்கறை இருப்பது போல் பேசுவார்கள், அன்போடு பேசுவார்கள், நகைச்சுவையாக பேசுவதாக சொல்வார்கள்.. அதன் வலி?

பக்கத்து வீட்டு வயசான அம்மா கேட்பா..."என்ன புள்ள தெளிஞ்சிக்கிட்டே போகுது... மாப்பிள்ள எடுக்குறது கஷ்டம் தான் என்ன? கொஞ்சம் யோசிச்சக்கங்க" என்பாள்... ஏதோ அக்கறையோடு கேட்பது போல் இருக்கும், அதைக் கேட்கின்ற நம் அம்மா, அப்பா மனசு வலியில் தைத்து முகம் வெறும் புன்னகை ஒன்றை மட்டும் கொடுக்கும்.. என்னவோ கேட்பளின் மகளோ, சந்ததியோ உடம்பு பெருக்கமாட்டார்கள் என்ற நெனப்பு அவக்கு.

குழந்தை பெற்ற தாய் சற்று உடம்பு போட்டிருப்பாள்...."என்னடி குழந்தைக்கும் சேர்த்து நீயே சாப்பிடுறாய் போல .... பகிடியாத்தான் கேட்பாள் தோழி... ஆனால் வலிக்கும். ஏதோ அவள் நாளை பிள்ளை பெற்று உடம்பு பெருத்திடமாட்டாள் என்ற தைரியம்.

அக்கா, தங்கை - ஒருத்தி ஒல்லியாகவும், இன்னொருத்தி உடம்பாகவும் இருந்து விடக் கூடாது... நன்கு தெரிந்திருந்தும் அக்காவை தங்கையா என்று கேட்பதும், தங்கையை அக்காவா என்று கேட்டும் சங்கடப்படுத்துவார்கள் சில புத்திசாலிகள். உங்கட வயது என்ன என்று கேட்பார்கள்? வயதைச் சொன்னதும் "பாக்குறதுக்கு அப்படி தெரியவே இல்ல... பெரிய ஆள் மாதிரி இருக்கீங்க என்று சொல்லி நாசூக்காக ஊசி குத்தும் சிலர்.

"இவள் இப்படி உடம்பா இருக்கிறதால தான்... அவள்ட புருஷன் இன்னொருத்திய தேடிப் போயிருப்பான் "

என்று நா கூசாமல் கதைக்கும் மெத்தப் படித்த அறிவாளிகள் சிலர்.. சில வேளை பேசுபவன் 10 மாத கர்ப்பிணி போல இருந்து அவன் மனைவி இதே மாதிரி யோசித்து விட்டால்?.. உண்மையில் ஆத்திரம் வருகின்றது.

இது மாதிரி இன்னும் எவ்வளவோ அடுக்கிக் கொண்டு போகலாம். இதை வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பெண்கள் அனுபவித்துக் கொண்டு தான் தன் வாழ்நாளைக் கடக்கிறார்கள். இதை உடைத்து வெளியே வர முயற்சியெடுக்கும் பெண்கள் ஒரு சிலர் தான். அவ்வாறான ஒரு பெண் தான் நீங்கள் போட்டோவில் பார்ப்பது.

ஒரு நாள் ஒரு அழைப்பு.. "நான் எடையைக் குறைக்க வேண்டும்" என்றாள். நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ முடியும் என்றோம். "எவ்வளவு காலம் எடுக்கும் என்று கேட்டாள்"... இந்தக் கேள்வி ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. எல்லோரும் ஒரே நாளில் நினைப்பது நடந்து விட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். நாங்கள் அனைவருக்கும் திடமாகச் சொல்லும் ஒரே பதில் "உங்கள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம், ஆரோக்கியமாக படிப்படியாக குறைப்போம், அவ்வாறு குறைக்கும் போது தான் குறைத்ததை மீண்டும் அதிகரிக்காது பேண முடியும், குறைப்பதல்ல - குறைப்பதை வாழ்நாள் முழுவதும் பேணுவதே முக்கியம், அதற்கு சரியான வழிகாட்டல் அவசியம், அதை எங்களால் நிச்சயமாகத் தர முடியும் " என உறுதியாக கூறினோம்.

"இல்லை. நான் அனேகமானவற்றை முயற்சி செய்து விட்டேன், விரைவாகக் குறைக்கலாம், என்றார்கள், சாப்பாட்டுக் கட்டுப்பாடு தேவையில்லை என்றார்கள், ஒன்றிலும் பலன் கூடவில்லை. அதனால் ஒரு முடிவோடு தான் வந்து இருக்கிறேன் என்று சொல்லி இணைந்து கொண்டாள்.

இவ்வளவு வெய்ட் இருக்கிறாளே, நன்றாக சாப்பிடுவாளோ என்று எண்ணும் ஜென்மங்களுக்கு - அதிகம் சாப்பிடுவதால் தான் உடல் பெருக்கின்றது என்பது எல்லோருக்கும் பொருந்தாது. அவளுக்கு மருத்துவப் பிரச்சினை ஒன்று இருந்தது. அதனால் தான் அவள் உடல் அதிகரித்திருந்தாள்.

ஆரம்பித்தாள்... சில மாதங்கள் விரைவாகக் குறைந்தது, இன்னும் சில மாதங்கள் சிறிதளவே குறைந்தது, தட்டிக் கொடுத்தோம்... முயற்சியைத் தொடர்ந்தாள். ஒரு வருடங்கள் தொடர்ந்தது, 35 கிலோ குறைத்து விட்டாள். எடை குறைவது என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது சிலர் விரைவாகக் குறைவர்.. சிலர் மெதுவாகக் குறைவர் .... இதை ஏற்றுக் கொள்ளாதவரை வெற்றி கிட்டாது.

அவளை நாம் மதிக்கிறோம். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் அவள் பல மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறாள். எங்களைப் பொறுத்தவரை அவள் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு Role Model.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், இவளது பதிவு பலருக்கு உற்சாகம் தரும், எனவே Share பண்ணுங்கள்.

நீங்க உங்க வாழ்க்கைல கேட்டு சலிச்சிப் போன Diet Dialogue எது?..😂 A. நாளைக்கு இருந்து Diet!🤣 B. இந்த Monday கண்டிப்பா Star...
14/10/2026

நீங்க உங்க வாழ்க்கைல கேட்டு சலிச்சிப் போன Diet Dialogue எது?..

😂 A. நாளைக்கு இருந்து Diet!
🤣 B. இந்த Monday கண்டிப்பா Start!
😜 C. இந்த ஒரு Function முடியட்டும்!
🤭 D. அடுத்த மாசம் 1ஆம் திகதியிலிருந்து!

Comment-ல A, B, C, D சொல்லுங்க...
இந்த Dialogue அ சொல்ற உங்க நண்பனுக்கு Tag பண்ணிட்டு அவன் செய்த அழிச்சாட்டியங்கள சொல்லுங்க...

முதலாவது, நாம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு முயற்சியும் பாராட்டப்பட வேண்டியவை.. கவலைப்படுவதற்கு முன் நடக்காமல் வீட்டில் இருப்...
13/10/2026

முதலாவது, நாம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு முயற்சியும் பாராட்டப்பட வேண்டியவை.. கவலைப்படுவதற்கு முன் நடக்காமல் வீட்டில் இருப்பவர்களை யோசித்துப் பாருங்கள்.. நீங்கள் அவர்களை விட ஒரு படி மேலே தான்.. அதில் சந்தேகமில்லை

நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.. வயது, உடல் நிறை, மருத்துவ நிலைமை, வாழ்க்கை முறை என பல விடயங்களில் நாம் வேறுபட்டவர்கள். எனவே நமக்கு எது முடியுதோ அந்த இடத்திலிருந்து ஆரம்பிப்பதில் Guilt தேவையில்லை..

சரி.. ஒருவர் வேகமாக நடக்கிறார்.. ஒருவர் சற்று மெதுவாக நடக்கிறார்.. இருவரும் ஒரே தூரத்தைக் கடக்கும் போது நாம் Burn பண்ணிய கலோரிகள் ஏறத்தாள சமனாகும்.. வேகமாக நடக்கும் போது Cardio fitness ஐப் பொறுத்த வரையில் சில மேலதிக நன்மைகள் இருந்தாலும் எடையைக் குறைப்பதில் பெரிய வித்தியாசமில்லை.. So..கவலையும் தேவையில்லை

முயற்சியை தொடருங்கள்.. வெற்றி நிச்சயம் இருக்கிறது

M. S. Shamil Fowzath
Clinical Nutritionist

Weight Loss பண்றண்டா Sugar Cut பண்ணனும்.. இது தான் இப்போதைக்கு சோசியல் மீடியால ட்ரெண்டிங் டொபிக்... நாம் தேநீருக்கு இடும...
13/10/2026

Weight Loss பண்றண்டா Sugar Cut பண்ணனும்.. இது தான் இப்போதைக்கு சோசியல் மீடியால ட்ரெண்டிங் டொபிக்... நாம் தேநீருக்கு இடும் சீனி என்பது Added Sugar என்ற வகைக்குள் வரும்.. இந்த மாதிரியான Added Sugar ஐ குறைப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது... ஆனால் Weight குறைக்கிரண்டா கட்டாயமா சுகர் கட் பண்ணித்தான் ஆக வேண்டுமா என்று கேட்டால்??...தேநீருக்கு சீனி சேர்க்கவே கூடாதா என்று கேட்டால்??...

எடையைக் குறைப்பதற்கு நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகின்ற மொத்த உணவையே கவனத்தில் கொள்ள வேண்டும்.. தனி ஒரு உணவை குறை கூறுவதல்ல.. எடை குறைக்கும் போது நம்மால் தொடர்ந்து கடைப்பிடிக்கக் கூடிய நல்ல பழக்கங்களை கட்டி எழுப்புவது மிக முக்கியமாகும்..

நான் எடை குறைக்கப் போகிறேன்.. சீனியை நிப்பாட்டப் போகிறேன் என்று சொன்னால்.. என்னால் எவ்வளவு காலத்திற்கு இதை கடைப்பிடிக்க முடியும் என்று உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள்.. உங்களால் முடியாது என்று நினைத்தால்..

எடையைக் குறைக்கும் போது அளவோடு சீனியை சேர்த்துக் கொள்ளுங்கள்.. அதே வேளை நாம் முழுநாளும் எடுக்கும் மொத்த உணவு, அதன் அளவு, மற்றும் நல்ல பழக்கங்களில் கவனம் செலுத்தங்கள்.. நிச்சயமாக எடையை குறைக்க முடியும்

WeightLoss #எடைகுறைப்பு #ஆரோக்கியஉணவு #சுகர்கட்

Diet-க்கு 5 நாள்...Diet- க்கு லீவு 2 நாள் உண்மையைச் சொல்லுங்க... உங்க Diet-க்கும் Saturday, Sunday Leave இருக்கா? 😂👇  #ந...
12/10/2026

Diet-க்கு 5 நாள்...
Diet- க்கு லீவு 2 நாள்

உண்மையைச் சொல்லுங்க... உங்க Diet-க்கும் Saturday, Sunday Leave இருக்கா? 😂👇

#நாள் #லீவு

நான் கொஞ்சம் தான் சாப்பிடுற என்று சொல்லும் போது.. காலை, மதியம், இரவுணவுக்கு சாப்பிடுற சோறு  கொஞ்சம், இடியப்பம் கொஞ்சம், ...
11/10/2026

நான் கொஞ்சம் தான் சாப்பிடுற என்று சொல்லும் போது.. காலை, மதியம், இரவுணவுக்கு சாப்பிடுற சோறு கொஞ்சம், இடியப்பம் கொஞ்சம், பிட்டு கொஞ்சம்.. இப்படியான சாப்பாடுகளைத் தானே நாம் கொஞ்சம் என்று சொல்கிறோம்?

இடைக்கிடையே சாப்பிடும் Ice Cream கொஞ்சம்... Chocolate துண்டுகள் கொஞ்சம்... முறுக்கு கொஞ்சம்... பிள்ளை மிச்சம் வெச்சதில் கொஞ்சம்... இந்த கொஞ்சங்களை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை தானே?... இவ்வாறு கணக்கில் வராத கொஞ்சங்கள் சேர்ந்து அதிக கலோரிகளை எமது உடம்புக்கு வழங்கலாம். இவற்றாலும் கூட எடை குறையாமல் இருக்கலாம்..

எடை குறையவில்லை என்றால் உணவைத் தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்... சில வேளை இவ்வாறு எடை குறையாமல் இருப்பது தற்காலிகமாகவும் இருக்கலாம்

எனவே "என்னடா, எடை குறையவில்லையே" என்று உடனடியாக மேலும் உணவைக் குறைக்காமல் கொஞ்சம் பொறுமையாகத் தொடர்ந்து எடை குறைவதை அவதானிக்க வேண்டும்...தொடர்ந்தும் Weight குறையவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து தேவையான மாற்றங்களைச் செய்வதுதான் சரியான வழி.

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா?... Comment இல் சொல்லுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

WeightLoss

நீரிழிவு நோய் இருக்கும் போது கனிந்த வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.. வாழைப்பழங்களில்  இந்த இனம் சாப்பிடலாம் அந்த இனம் சாப்ப...
11/10/2026

நீரிழிவு நோய் இருக்கும் போது கனிந்த வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.. வாழைப்பழங்களில் இந்த இனம் சாப்பிடலாம் அந்த இனம் சாப்பிடக் கூடாது என்று பலரும் சொல்லக் கேள்விப்படடிருக்கிறோம் இல்லையா.. சில வேளைகளில் வைத்தியசாலைகளிலும் சொல்லக் கேட்டு இருக்கிறோம் இல்லையா?..

இதில் உண்மை இருக்கிறதா என்றால்.. இருக்கிறது.
வாழைப்பழத்தின் இனம், கனிந்த தன்மை போன்றவற்றைப் பொறுத்து இரத்தத்தில் சீனியின் அளவில் ஏற்படும் மாற்றமும் வேறுபடக் கூடும் .

ஆனால் அதற்காக கனிந்த வாழைப்பழம் சாப்பிட்டாலே சீனி மிக அதிகமாகக் கூடிவிடும் என்றோ, குறிப்பிட்ட ஒரு இன வாழைப்பழத்தை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றோ அர்த்தமில்லை.

இங்கு எவ்வளவு வாழைப்பழங்கள் சாப்பிடுகிறோம் என்பதே மிக மிக முக்கியம். ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதற்கு பதிலாக 4-5 வாழைப்பழங்கள் ஒரேயடியில் சாப்பிட்டால் நிச்சயம் சீனி கூடி விடும்

எனவே கனிந்த பழங்கள் சாப்பிடலாம்.. இந்த இன வாழைப்பழம் தான் வேண்டும் என்று தேவையில்லை.. அளவோடு சாப்பிடுங்கள்..

பொதுவாக நாம் நமது பிரதான உணவில் அதிக Carbs சாப்பிடுபவர்கள்.. எனவே பழங்களை பிரதான உணவோடு சாப்பிடாது இடையுணவாக எடுத்துக் கொள்வது சிறந்தது

Doubt இருந்தால் Comment இல் சொல்லுங்கள்
Share செய்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்

M. S. Shamil Fowzath
Clinical Nutritionist

#நீரிழிவு #சர்க்கரை #ஆரோக்கியம்

நம்மில் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருப்பது டயட் என்பது பட்டினி கிடைப்பது, சாப்பாட்டை குறைப்பது என்று..டயட் என்பது ஆரோ...
10/10/2026

நம்மில் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருப்பது டயட் என்பது பட்டினி கிடைப்பது, சாப்பாட்டை குறைப்பது என்று..

டயட் என்பது ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிடுவது.. இவ்வாறு சாப்பிடும் போது உண்மையில் நாம் அதிகம் சாப்பிடுவது போன்றே தோன்றும்..

Weight குறைப்பது முக்கியம்... அதைவிட அதைத் தொடர்ந்து Maintain பண்ணக்கூடிய பழக்கங்களை உருவாக்குவது முக்கியம்

எனவே பசியைத் தாங்கிக்கொண்டு இருப்பது நல்ல Diet Plan-இன் அடையாளமல்ல.

#டயட் #ஆரோக்கியம் #எடை குறைப்பு

நீங்க எங்களுக்கு உங்க Diet Chart அ தரமாட்டிங்களா? என்று கேட்பவர்கள் உண்டு.. Diet Chart என்பது அனைவருக்கும் ஒன்று அல்ல..உ...
10/10/2026

நீங்க எங்களுக்கு உங்க Diet Chart அ தரமாட்டிங்களா? என்று கேட்பவர்கள் உண்டு.. Diet Chart என்பது அனைவருக்கும் ஒன்று அல்ல..உதாரணத்திற்கு

நாள் முழுவதும் Office-ல் அமர்ந்து வேலை செய்பவருக்கும், கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவருக்கும் Energy தேவை ஒரே மாதிரி இருக்காது.

அதே போன்று Energy தேவை என்பது பல காரணங்களில் தங்கி உள்ளது

ஒவ்வொருவருடைய தேவைக்கும் ஏற்றவாறு உணவின் அளவைத் தீர்மானிப்பதே சரியான அணுகுமுறை. எனவே தான் Diet Chart என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது

#டயட்சார்ட் #டயட்போரலிபி

1. தினமும் Walking போக வேண்டுமா? இடையில் Rest Day அவசியமா?Gym இற்கு செல்பவர்களைக் கேட்டால் சொல்வார்கள் இடையில் Rest Days...
02/10/2026

1. தினமும் Walking போக வேண்டுமா? இடையில் Rest Day அவசியமா?

Gym இற்கு செல்பவர்களைக் கேட்டால் சொல்வார்கள் இடையில் Rest Days அவசியம் என்று... அதில் உண்மை இருக்கிறது... ஏனென்றால் Intense Running, Hard resistance training, HIIT போன்ற கடினமான Exercise செய்பவர்களுக்கு தசைகள் recover ஆவதற்கு இடையில் rest அவசியம்.. அப்படியானால் அது Walking இற்கும் பொருந்துமா என்று கேட்டால்... இல்லை, நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தினமும் Walking போக முடியும் என்பதே பதில்.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் இருக்கிறது... நான் தினமும் Walking போகிறேன்... என் நண்பர் வாரத்தில் 4 நாட்கள் தான் போகிறார்... அதனால் நான் தான் Better என்று சொல்லவும் முடியாது.. ஏனென்றால் நாம் அவ்வாறு Compare பண்ணுவதற்கு பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்
நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் ... தினமும் நடக்கிறோம்... தொடர்ச்சியாக வலி அதிகரித்தல், காயம், ஏதாவது மருத்துவக் காரணங்கள் மற்றும் வழமைக்கு மாறான அறிகுறிகள் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.. நம்மை நாம் திணித்துக் கொள்ளாமல் நம்மால் முடிந்தளவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்

2. Walking ஆரம்பித்த பிறகு காலில் நோவு வந்தால் என்ன செய்வது?

நெடு நாட்களாக வீட்டில் சும்மா இருந்து விட்டு நடக்க ஆரம்பித்தால் காலில் வலி வருவது என்பது சாதாரணமே... அதே வேளை ஏற்கனவே நடந்து கொண்டு தான் இருக்கிறோம்... வேகத்தை அதிகரிக்கும் போதோ, தூரத்தை அதிகரிக்கும் போதோ வலி வரலாம் அல்லது ஒரு நாள் Comfortable ஆக நடப்போம், அடுத்த நாள் நடப்பதற்கு கஷ்டமாக இருக்கலாம்... இவை பொதுவாக ஏற்படக்கூடியவை, இவற்றை Exercise நோவாக கருதலாம்.. இதற்காக Walking ஐ விட வேண்டியதில்லை.. அடுத்த நாள் தூரத்தைக் குறைத்தோ, வேகத்தைக் குறைத்தோ, நேரத்தைக் குறைத்தோ Walking செல்லலாம்..

கடுமையான நோவு, மூட்டிலோ / எலும்பிலோ கணிசமான வலி, நோவு தொடர்ச்சியாக அதிகரிப்பது, வீக்கம் போன்றவற்றை Exercise நோவாக கருதி கடந்து செல்ல முடியாது.. சிலர் "No Pain, No gain" என்று சொல்லிக்கொண்டு இந்த அறிகுறிகளை புறக்கணித்து செல்ல முடியாது

ஏதோ ஒரு வேகத்தில் இன்று 1km நடந்தேன்... நாளை 10 km நடக்கப் போகிறேன் என்று ஒரேயடியான மாற்றங்களை செய்யாது படிப்படியான மாற்றங்களை செய்வதே சரியான வழி

3. Walking போகும் போது இடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தால் பலன் குறைந்து விடுமா?

இப்போது தான் Walking பண்ண ஆரம்பித்திருக்கிறீர்கள்... ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் இளைக்கிறது.. ஓய்வெடுத்தால் பிரயோசனம் இல்லாமல் போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை... தேவைப்பட்டால் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் பின் தொடருங்கள்.. நாம் தொடர்ச்சியாக Walking செய்யும் போது எமது உடலின் Endurance ம் படிப்படியாக அதிகரிக்க ஒய்வெடுப்பதற்கான தேவை குறைவதை நீங்களே அவதானிப்பீர்கள்.. அதுவரை ஓய்வெடுப்பதில் தப்பில்லை... அதற்காக Guilt ஆகவும் தேவையில்லை

4. Walking போகும் போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா?

ஆம் குடிக்கலாம்... Walking போகும் போது மட்டுமல்ல Walking போவதற்கு முன்பாகவும் முடித்த பின்னும் தண்ணீர் அருந்த முடியும். இது Cool water/ Warm Water ஆக இருந்தாலும் ஓகே தான். அதற்காக வயிறு முட்டும் வரை தண்ணீர் குடியுங்கள் என்று அர்த்தமில்லை... அளவோடு குடிப்பது

எமக்கு எவ்வளவு தண்ணீர் தேவையென்பது பல விடயங்களில் தங்கியுள்ளது... சூழல் வெப்பநிலை, ஈரப்பதன், நாம் எவ்வளவு நேரம் நடக்கப் போகிறோம், நமது எடையின் அளவு, நமக்கு வியர்க்கும் அளவு.. இவ்வாறு பல விடங்களில்.. ஆகவே பொதுவாக தாகத்திற்கு ஏற்ப குடிக்கலாம்

ஆனால் மிகவும் சூடான சூழலில் நெடு நேரம் நடக்கும் போதும் மிக அதிகளவில் வியர்த்துக் கொட்டும் போதும் தாகம் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை.. தாகம் வரும் முன்னே அருந்த முடியும்.. மேலும் இந்த சூழலில் நடக்கும் போது lime water+ one pinch of Salt இனையும் இட்டு குடிப்பது நன்மை பயக்கலாம்.

பிரயோசனமாக இருந்தால் மற்றவர்களையும் சென்றடைய Share செய்திடுங்கள்

உங்களின் கருத்துகளையும் சந்தேகங்களையும் Comment இல் பகிர்ந்திடுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

Address

Diet For Life, Maraikkar Road, Maruthamunai/04
Maruthamunai
32314

Alerts

Be the first to know and let us send you an email when Diet for Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diet for Life:

Shortcuts

Share